உதைப்பும், சுமையும், எங்கேனும் மகிழ்ச்சி தருமா

தணியாத தாகமென்று
தவித்தேங்கும் நேரமதில்,
அருமருந்தென மனம் நிறைக்க,
செல்வத்துள் பெரும் செல்வம் ,
பிள்ளைச் செல்வமே!
ஐயிரண்டு பத்துத் திங்கள்,
பொறுமை காக்க,
பெருமை தரும் காலமிது.
வயிற்றுள்ள கரு தரும் உதைப்பு,
நிறை மாத தங்கைக்கு மிழ்ச்சிதானே!

மாதம் ஒன்று ஒன்றாய் கூட
வேதனையும், வலியும்
பலவிதமாய் வளர,
உதைப்பும்,சுமையும்,
மாறி மாறி வர,
பெற்ற பிள்ளைதனை,
கையிலெடுத்து, முகத்தோடு,
முகம் நுகர,பெறுவது
சுமையே அல்ல,சுகம் தானே!


சிறிதோ,பெறிதோ,
நமதோ,அசலோ,
சுமையென்பது சுமையே!
நினைப்பதனை தள்ளி வைத்து,
பெண்மையின் பூரணத்துவம்,
பெரிதெனப்படுவது பேறு காலப் பெருமையே!

சுமக்கும் கருதனை நினைத்து,
நித்தம் தரும் மகிழ்வு,
தந்திடும் பெரும் வாழ்வு.
சுமப்பது,பெயர் நிலைக்க,
வரும் வாரிசு என்றே,
சுமையே, சுகமாக,
மனம் நிறைக்கும் மகிழ்ச்சியன்றோ!

எழுதியவர் : arsm1952 (22-Oct-19, 10:25 am)
சேர்த்தது : arsm1952
பார்வை : 74

மேலே