விதியின் கிறுக்கல்கள்🌏
விதி என்னை
வரையும் போது
மை தீர்ந்து விட்டதோ
அதனால் தான் கிறுக்கி
பார்த்தும் விட்டதோ....
இன்ப நிறங்கள்
என் வரைபடத்தில்
வகுக்கப்படவில்லையோ
அதனால் தான்
தீட்டப்படவும் இல்லையோ...
உதடுக்கு மெளன நிறம்
கண்ணுக்கு கண்ணீர் நிறம்
முகத்திற்கு சோக நிறம்
அகத்திற்கு அன்பு நிறம்
மொத்த வாழ்வுக்கு போர் நிறம்
உறவுகள்
என் வரைபடத்தில்
அங்காங்கே கீறி
அழிக்கப்பட்டதோ
அங்கலாய்ப்பும்,அடிகளும்
அனுபவ ரேகைகுள்
பார்த்து பார்த்து
பல நாட்கள் செதுக்கப்பட்டதோ?
கனவுகள் ஆஸ்துமாவை
போல இழுத்து வெளிவிட
முடியாத அமைப்பில்
அமைக்கப்பட்டதோ?
விதிக்கு என் இரங்கல்
எழுத முகவரி தேடுகிறேன்
தெரிந்தால் தரவும்....
💢இஷான்💢