உறிஞ்சல்
உறிஞ்சல்
பலநாட்கள் திரிந்து,
பன்மலர்கள் தேர்ந்து,
சுற்றத்துடன் இணைந்து,
சுறுசுறுப்பாய் அலைந்து,
தேனீ உறிஞ்சி உறிஞ்சி சேர்த்த
தேனை,
தேனீயின் ஒட்டு மொத்த உழைப்பின் பலனை,
நொடி நேரத்தில்
சொட்டு விடாது
உறிஞ்சி ,
உழைப்பிற்கு
உதாரணம் தேனீ காண்
என்கிறான்
களவாணி மனிதன்!