தீய குணத்தால் இராவணர்கள்

தீரன், சூரன், வேத பண்டிதன்
இசை மாமேதை, வீணையில்
சாமம் கூட்டி வாசித்து இமயோனையும்
இசையால் மயக்கி வரன்கள் பல பெற்றவன்
நவ கிரகங்களும் இவனுக்கு அஞ்சி நடக்குமாம்
இத்தனையும் இருந்தும் அவனிடம் விநயம்
இல்லாது போனது ....ஒழுக்கத்தில் தவறினான்
அது அவனை மீளாத்துயரில் ஆழ்த்தியது
அதிகாயன் முதல் இந்திரஜித் வரை தான் பெற்ற
வீர மைந்தர் ஒவ்வொருவரையும் அவர்கள்
படையோடு இழந்தான், மாவீரன் ராமுனுடன்
போரில்,முடிவில் அன்பு சகோதரன் கும்பகருணன்
அண்ணனுக்கு செஞ்சோற்று கடன் தீர்த்தான்
மற்றோர் இளைய சகோதரன் விபீஷணன்
'அன்னே நீ செல்லும் மார்க்கம் சரியல்ல
சிறையில் வைத்த சீதாபிராட்டியை விடுவித்து
ராமனிடம் சேர்த்து , உன் கரையைப் போக்கிக்-
கொள் , உன் அன்பு மனைவி கற்பின் உறைவிடம்
மண்டோதரியுடன் வாழ்ந்திடு' என்று கூற
அதற்கும் செவி சாய்க்காது, தன் வழியிலேயே
சென்றான் தன் இறுதியை நோக்கி... ஊழ்வினையோ
.......... அறம் அவனை அயோத்தி மன்னன்
ரகுகுல திலகம் ராமன் உருவில் வந்து
பொருதியே வீழ்த்தியது .... உலகோர் உணர.



................ இது அன்று திரேதாயுகத்தில் நடந்த
'இதிகாசம்'......

இன்றும் குணத்தின் விகாரத்தால் பெரும்
ராக்கதராய் மாறி தம் தீய குணங்களின்
விதரிப்பில் வரம்பிலா அக்கிரமங்கள், அநியாயங்கள்
செய்து மக்களை கொலை, கற்பழிப்பு என்று
மாய்த்து ஏதேதோ செய்து அலையும்
இன்றைய ராகத்தார்' இராவணர் ஆங்காங்கே
உள்ளார்.....ஒருவர் ஒருவராய் விதி இவர்களை
மாய்த்தும் ஒடுங்குவாரை இல்லையே இவர்கள்
இதுவும் விதியின் சதியா.....

புரியலை......ஒன்று மட்டும் புரிகிறது

'அரசன் அன்றே கொள்வான், தெய்வம் நின்று
கொள்ளும்'
தீயோர் நால்வர் ஒரு நாள் உறுதி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Oct-19, 4:57 pm)
பார்வை : 66

மேலே