கண்ணே சுர்ஜித் எழுந்து வா
உலகமே உனக்கடா
உள்ளூர உயிர்த்தெழுந்து வா..!
கைகள் இரண்டை உயர்த்தியே
சிறகை விரித்துப் பறந்து வா..!
கால்கள் அதை உந்தியே
கவலை மறக்க உயர்ந்து வா..!
இருள்கள் அதை விரட்டியே
வெளிச்சம் காண ஓடி வா..!
அன்னை மடியின் அன்பு இருக்கு
அதனை ருசிக்க மகிழ்ந்து வா..!
தந்தை நெஞ்சில் பாசம் இருக்கு
அதனை நுகர எழுந்து வா..!
பாட்டி மனசு பதறிக் கிடக்கு
பாசம் ஊட்ட விரைந்து வா..!
நாடெல்லாம் மகிழ்ச்சி கொள்ள
நல்லபடியே சிரித்து வா..!
ஊரெல்லாம் உறங்க மறுக்கு
உயிரைப் பிடித்துக் கொண்டு வா..!
ஆலயந்தோறும் வேண்டுதல் நடக்கு
நம்பிக்கை தர மீண்டு வா..!
ஆழ்துளையில் அதிசயம் காண
அல்லும் பகலும் மூச்சு தந்து
அயராது தூக்கம் தொலைத்து
அரசும் தன்னை விழித்துக் கொண்டு
ஆவலுடன் காத்திருக்கு....
கண்ணே! சுர்ஜித் எழுந்து வா..!!
வேல் முனியசாமி...