ஒரு தலை காதல்

பார்க்காமலே போற பெண்ணே
என்னை கடத்தி போகாதடி
நெஞ்சுக்குள்ள நீ வந்த
இதயத்துடிப்பும் வேகம் கூட்டுத்தடி
இன்ச் இன்ச்சா காதல் செய்ய
நானொன்றும் நத்தை இல்ல
தெரிஞ்சுக்கொடி
காபிஷாப் போகவேண்டாம்
கடற்கரைக்கும் போகவேண்டாம்
கோவிலுக்கு போவோமடி
சுடர்விளக்காய் ஒளிர்வோமடி
ஆதி பெண்ணே சம்மதமா
அஹிம்சையில நான் உன்னோட
மாமனாய் உறைந்து போகட்டுமா
தங்கத்திற்கு என்ன வேண்டும்
தங்கமே இன்னும் என்ன வேண்டுமடி
உன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு
நிகழ்காலத்தில் வாழ்ந்திட நானும் ரெடி
உன் மௌனத்திற்கு என்ன விலை
நானும் கேட்காத நாளும் இல்லை
நீயும் பதில் சொல்ல வாய்திறப்பதும் இல்லை
இதுக்கும் மேல் உன் பின்னால்
நான் சுற்றுவதும் நியாயமில்லை
இப்போதும் நீ என்னை கடந்து
செல்வதும் கவிதையடி! கவிதையடி!!