உனைப்போல்

ஒரு நதி
உனைப்போல் குளிர்விப்பதில்லை
ஒரு வானவில்
உனைப்போல் வண்ணமானதில்லை
விண்மீன்களின் நடுவில்
நிலா
உனைப்போல் ஒளிர்வதுமில்லை
உலகப்பெண்கள் யாவரும்
உனைப்போல் பேரழகாயுமில்லை
என் காதலிகளில் யாரும்
உனைப்போலெனைக்
கொன்றதுமில்லை

எழுதியவர் : Rafiq (4-Nov-19, 3:00 pm)
Tanglish : unaipol
பார்வை : 323

மேலே