காட்டு மல்லி பூத்திருக்கு பறிக்க வா மாமா
காட்டு மல்லி பூத்திருக்கு
மாமாவே/
வீதியெங்கும் அதன் பேச்சு
மாமாவே/
வீட்டு நெல்லி காய்த்திருக்கு
மாமாவே/
தொட்டுப் பறிக்க நாளாச்சு
மாமாவே/
கூடி விளையாடியதை மறக்கல
மாமாவே/
கூட்டாஞ்சோறு போட்டவை
நினைவிருக்கு மாமாவே/
கொல்லையிலே தலவாழை சிரித்திருக்கு மாமாவே/
முற்றத்திலே கோலம் விழித்திருக்கு
மாமாவே/
வெள்ளைப் புறா இறகடிக்கிறது
மாமாவே/
செவ்வந்தியும் வாசலைப் பாத்திருக்கு மாமாவே/
காத்தோட்டமான அறையும் வரவேற்கிறது மாமாவே /
கட்டிலும் வெட்கப் படுகிறது மாமாவே/
பட்டு உடுத்த ஆவலோ நீளுது
மாமாவே/
நெற்றிப் பொட்டுக்கும் ஆசையாச்சு மாமாவே/
மெட்டி ஒலி கேட்க வேண்டும்
மாமாவே/
நெஞ்சில் தாலி உரசிக்க வேண்டும் மாமாவே/
உன் அக்கா வீட்டு மொட்டு /
மலந்திடிச்சு கட்டழகாய் வளந்திடிச்சு மாமாவே/
கொட்டு மேளத்தோடு ஊரைக் கூட்டி/
கரம் பிடிக்க வந்திடு மாமாவே /
தேர்வுக்கு நன்றிகள் ❤🙏🙏