அகதிகள்

அகதிகள்

பசுமை செழித்த வயல் தான்!
வளங் கொழித்த ஊர் தான்!
ஓயாது உழைத்த வர்க்கம் தான்!
அமைதி தழைத்த பூமிதான்!

அன்பு ஒழித்த மனதிலே
இனவெறி கொழுத்த மனிதரால்,
அறம் பழித்த முறையிலே
உறவு அழித்த போரினால்,

ஆசை மழித்த மனதொடு
கனவு கழித்த கண்ணொடு-வெறும்
உயிர் பிழைத்து செகத்திலே
விதியை பழித்து வாழும் அகதிகள்!

எழுதியவர் : Usharanikannabiran (9-Nov-19, 1:45 pm)
Tanglish : agathigal
பார்வை : 63

மேலே