வள்ளுவர் வீடு பூட்டியிருக்கிறதுமீள் பதிவு

கம்பர் போய்
பார்த்தார்....
வீடு பூட்டியிருந்தது.
அப்பர் தேவர்
சுந்தரர்
மூவரும் போய்
பார்த்தனர்....
வீடு
பூட்டி யிருந்தது...
மனைவி வாசுகி
போய் பார்த்தாள்...
பூட்டு
உடைந்து கிடந்தது...
அய்யோ
என்ற படி,
வீட்டிற்க்குள்ளே
போய்
பார்த்தாள்.....
வெளுத்த நிறத்தில்
ஒரு வெள்ளையன்...
பதறியபடி
நீ
யாரென்றுகேட்டாள்....
அதற்கு அவன்
ஜி.யு.போப்
என்றான்....
என்ன வேண்டும்
என்றாள்....
ஏழு வார்த்தையில்
ஏழாவது பிறவிக்கு
அர்த்தம்
தேடிவந்தேன்
என்றான்....
பூட்டை யுடைக்க
காரணம் கேட்டாள்...
வெளியில் எங்கும்
ஏடு
திறந்திருக்கிறது...
ஆனால்
அர்த்தம்
பூட்டியிருக்கிறது...
இங்கு
வீடு
பூட்டியிருக்கிறது
ஏடும்
பூட்டியிருக்கிறது
அர்த்தம்
திறந்து இருக்கிறது
என்றான்....
உடனேஅவள்,
இது
என் னவனின் ஏடு
இதை
பாரெல் லாம்போய் பாடு
என்றே
புன் னகையோடு
எடுத்து கொடுத்து
அனுப்பி வைத்தாள்....
வள்ளுவர்
வருகிறார்....
வீட்டிற்க்கு பூட்டு
இனி தேவையில்லை...
திண்ணையில்
எடுத்து வை....
திருக்குறளில்
தீண்டாமை யில்லை
என்று
சொல்லிவிட்டு
நிம்மதியாய்
தூங்கப்போகிறார்....

எழுதியவர் : ருத்ரா (13-Nov-19, 12:49 pm)
சேர்த்தது : ருத்ரா நாகன்
பார்வை : 59

மேலே