எழுதலாமே ஏதாவது அதன் தொடர்சி 13

எழுதலாமே ஏதாவது. அதன் தொடர்சி 1/3

பாட்டின் வேகம் குறைய காற்றின் வேகமும் குறைய தொடங்கியது. காற்று என் பக்கம் வீச தொடங்கியது. காற்றின் வேகத்தில் என் பாய்மரத்தின் வளையத்திற்குள் அலைகள் புகுந்து விளையாடுவதை காணும் போது சிவாஸ்கந்தவர்மனுடைய எண்ணம் பாய்மரத்தின் வேகத்தை விட மிக வேகமாக ஸ்ரீவிஜயத்தை அடைந்தது. ஆம் ஸ்ரீவிஜயத்தில் தான் ஓங்கில்கள் பாய்மரத்தின் வளையத்திற்குள் நுழைந்து விளையாடும்.

ஓங்கில்களின் எண்ணம் மட்டும் அவன் எண்ணத்தில் ஓங்கி இருக்கவில்லை, ஸ்ரீவிஜயத்தின் இளவரசி சுமத்ராவின் எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வுலகில் பிறந்த ஆண்களின் மனதிற்குள் சுமத்ராவை காண ஆவல் எழா நொடிகள் கிடையாது.

ஆம் சுமத்ராவின் வனப்பு வாலிபத்தை தூண்டும் சக்தியுடையது. வானத்தின் உச்சியோடு தினம் பேசும் அவளின் உச்சந்தலையின் மலரை கேட்டால் சொல்லும் அவளின் கேசத்தின்அழகை. ஒற்றை கதிரில் ஒளிரும் திலகத்தை கேட்டால் சொல்லும் அவளின் நடு நெற்றியின் அழகை. ஆண்களின் நாபிவரை சென்று தாக்கும் அதிர்வை கேட்டால் சொல்லும் அவளின் நயனங்களின் அழகை. எட்டும் தோற்றுபோகும் அவளின் வளைவுகளில், கோவையின் வண்ணமும் தோற்றுபோகும் பாவையின் இதழோடு போட்டிபோட்டால், நாம் எவ்வாறு வெல்ல போகிறோம் அவ்விதழை என்று எண்ணியவாறே சிவஸ்கந்தவர்மனுடைய பாய்மரகப்பல் ஸ்ரீவிஜயத்தின் கோட்டைவாயிலை நெருங்கியது."................தொடரும். 1/3

எழுதியவர் : சிவகுமார் ஏ (14-Nov-19, 12:50 pm)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 81

மேலே