எழுதலாமே ஏதாவது அதன் தொடர்சி 12

எழுதலாமே ஏதாவது. அதன் தொடர்சி 1/2

ஏனோ என்னுள் ஓர் கலக்கம்.
"அழுது தீர்க்க வேண்டுமென்றால் அழுதுவிடு. உனக்கான கண்ணீர் உன் கண்களில் இருந்தே வரட்டும். தீராத சோகம் உனை வாட்டுதென்றால் அதை போக்க அழ வேண்டுமென்றால் அழுதுவிடு"

தேகம் கிழிக்க கண்கள் சினுங்கவே வந்த கண்ணீர் மேலே சொன்ன கண்ணீர். விண்மீன்கள் வா வா என்றே அழைக்கிறது பூங்குழலி. சமுத்திரத்தின் சீற்ற அலைகள் எனை பார்த்து சிரிக்கிறது. பாய்மரம் காற்றின் எதிர்திசையில் பயணிக்க மறுக்கிறது. அங்கே தூய்மையின் ஒளி என்பாதையை அமைக்கிறது அலைகடல் மேலே அதில் பயணிக்க தொடங்கியது பாய்மரம் சிறு தடுமாற்றத்தோடே அக்கணம் எண்ணத்தில் ஓர் வினோதம் என்னுள்

"மாய வினோதம் - நீயொரு
மாய வினோதம்
உனை என்னும் நெஞ்சிற்கு
ஞான வினோதம் - நீயொரு
ஞான வினோதம்
உனை தேடும் தேவருக்கு
அபய சங்கீதம் - நீயொரு
அபய சங்கீதம்.

மாய வினோதம் - நீயொரு
மாய வினோதம்

கிழக்கும் மேற்கும்
சுழலும் ரவியும்
உன்னுள் ஓர்விழிதானே

பகலும் இரவும்
உலவும் மதியும்
உன்னுள் ஓர் விழிதானே

மாய வினோதம் - நீயொரு
மாய வினோதம்

நீரும் மணலும்
உறையும் நதியும்
உன்னுள் ஓடும் உதிரம்தானே

உலகும் உயிரும்
உறையும் நொடியும்
உன்னுள் பாடும் கானம்தானே

கண்ணாஆ........... மாய வினோதாஆ.......
என்னுள் நீயொரு மாய வினோதா...

என்று எண்ணியவாரே அவ்விரவில் நிலவின் துணையோடு பாய்மரத்தை காற்றின் எதிர்திசையில் இயக்கினேன்." ...........தொடரும். 1/2

எழுதியவர் : சிவகுமார் ஏ (14-Nov-19, 12:49 pm)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 62

மேலே