எழுதலாமே ஏதாவது

எழுதலாமே ஏதாவது.

ஆம் எழுதலாம். ஒரு நாள் நான் நிலைகண்ணாடியின் முன் சிலைகண்ணாடியாய் நின்றேன். சற்றும் எதிர்பாஎதிர்பாராத தருணம் எனது அலைபேசியின் அலறல் குழலோசையில். என் காதருகே சினுங்குமோசை கேட்டும் சற்றும் அசையாமல் சிலையெனவே நின்றேன். பூகம்பம் வந்தாலும் பூமியிரண்டாக பிளந்தாலும் என்னை அசைக்க முடியாத நிலை நிலைகண்ணாடியின் முன் நான் நின்ற நிலை.

என்ன ஒரு பேரானந்தம், பேராற்றல், அமைதியின் தழுவல் அங்கே என்னை ஆரதழுவிக்கொள்ளும் நொடிகள். ஏழாம் நூற்றாண்டின் எல்லையற்ற அமைதி என்னுள் ஒடுங்கி கிடக்கிறது. அது ஒரு போர்காலம். ஆம் இரவுக்கும் குளிருக்குமான போர் அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவ்விரவில் நான் தனிமையின் நிழலில் நிலைகண்ணாடியின் முன் சற்றும் அசையாமல் நின்று கொண்டிருந்தேன். குளிரின் வேகம் என் தேகத்தை கிழிக்க தொடங்கியது............தொடரும். 1/1

எழுதியவர் : சிவகுமார் ஏ (14-Nov-19, 12:48 pm)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 84

மேலே