முதுமொழிக் காஞ்சி 89

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
உட்கில் வழிச்சின நல்கூர்ந் தன்று, 9

- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மதிப்பில்லாவிடத்து கொள்ளும் கோபம் பயனற்றதாம்.

கருத்து: மதியாதார்முன் வெகுளும் வெகுட்சி வறுமையுறும்.

உட்கு - அச்சம்: பிறர் அஞ்சத்தக்க மதிப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-19, 2:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே