என்னை கொள்ளும் ஆயுதம் உன் காகிதம் 555

என்னுயிரே...
உன் விழிகளின்
வீசியில் வீழ்ந்த நான்...
உன் விழிப்பார்த்து
சொல்ல
தெரியாத காதலை...
கடிதத்தில்
சொன்னேன்
உன்னிடம்...
கைபேசியும் பேசவில்லை
கண்களும் பேசவில்லை...
உனக்கும் எனக்கும்
கடிதங்கள்
பேசியதே அதிகம்...
உன் கைகளில்
காகிதம் பார்த்தாலே...
எனக்குள் கோடி
இன்பம் தோன்றுமடி...
இன்று உன்
கைகளில்
இருக்கும் காகிதம்...
என்னை கொள்ளும்
ஆயுதமாக மாறிவிட்டதடி...
அது உன்
திருமணஅழைப்பிதழ் என்பதால்...
உன் காகிதமே
நம் காதலை வளர்த்தது...
உன் காகிதமே கத்தியாக
மாறிவிட்டது எனக்கு.....