ஏது சொல்ல
நீண்ட தூரம் கூடவே வருவாள் என்று நம்பிக்கையில் நடந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக பின்தங்கிவிட்டாள்.
காணவில்லையே என்று திரும்பிய போது எல்லாம் கடந்துவிட்டது.
தேடி பின்நோக்கி சென்றால் கண்டு மகிழும் நிலையில் அவள் இல்லை,
தேடிப் போய் அவமானப்படுகிற அளவிற்கு நானும் பலவீனம்.
இருந்தும் கண்ட இடத்தில் என் நிலை கண்டு காறி உமிழ்ந்துவிட்டு சென்றவளிடம் ஏது சொல்வது?
புறம் நோக்கி பூக்கும் காதல்களுக்கு மத்தியில் அகத்துள் எழுந்த காதல் மனதில் இமயமாய் வளர்ந்திருக்க, அதன் வேரின் நீளம் யார் ஈடுசெய்வார்?
எல்லாம் கொஞ்சக்காலம் என்பதை கண் முன்னே நிகழ்த்திச் சென்ற தருணங்களுக்கு எத்தனையோ இருந்தாலும் இந்தக் காதல் ஏனோ இதயத்தை இடைஞ்சல் செய்கிறது கொடுரமாக.
ஜோடியாக யாரைக்கண்டாலும் அவளே ஞாபகத்திற்குவர,
வெறுக்க இயலவில்லை.
அடையாளம் காணாத சந்தர்ப்பங்களிலும் அணையாத நினைவாக நெஞ்சில் வாழும் காதலே போதும் நீ போதித்த வலிமிகு ஞானம்.
இயற்கை செய்த சதியோ என்னை தனியாய் பயணம் செய்ய செய்வதற்காக சிவம் செய்த செயலோ?
இனி யாரை அந்த அளவிற்கு நேசிக்கப் போகிறேன் சுவாசம் போல!
என் இதயத்தில் அவள் தந்த காயத்தைவிட ஏதுவுமில்லை!
இவை உண்மையில் அவளுக்கானவை!