காத்திருக்கும் என் விழிகளை பாரடி 555

***காத்திருக்கும் என் விழிகளை பாரடி 555 ***
என்னுயிரே...
மீண்டும் உன்னை தேடிவருவேன்
காத்திரு என்கிறாய்...
உனக்காக இன்றுவரை
காத்திருக்கிறேன்...
கண்களை மூடி கனவில்
காண்கிறேன் தினம் தினம்...
உன் பெயரை தினம்
ஆயிரமுறை
எழுதி பார்க்கிறேன்...
பார்க்க துடிக்கும்
என் கண்களுக்கு...
இமைகளை மூடி நினைவுகளால்
காட்டுகிறேன் உன்னை...
இனியும் என்னை
காக்க வைக்காதே...
என்னுயிரே விரைந்து
வந்து என் கரம் பிடி.....