வா கண்ணே
இன்பம் துன்பம் இரண்டையும்
நன்றாய் எப்போதும் ஏற்கும்
பெண்ணாய் இருப்பாயா கண்ணே?
கண்ணாய் உனைப் பார்ப்பேன்
மண்ணாய் உனைக் காப்பேன்
பாயும் பன்னும் போல்
தாயும் சேயும் போல்
இரண்டறக் கலந்து இருவரும்
வாழ்ந்திடலாம் ஒன்றாய் !
அஷ்றப் அலி