வாழ்க்கைத் துணையே
![](https://eluthu.com/images/loading.gif)
காதலியே
என்காவியமே நீ
எனைபார்த்த விழிகளில்
நான் பதுங்கிகொள்ளவா....
விண்மீன் திரளே
விடியற் தென்றலே
காரிருள் திங்களே -எனை
கவ்விய செவ்வாயே
நீ உலவிய கனவில்
நான் உறங்கியே கிடக்கவா...
மாமண மல்லியே
மருதத் தாமரையே
மாமலை குறிஞ்சியே
எனை உறிஞ்சிய
உன் இதழினுள்
தேனாய் நானாகவா....
பூம்புனல் நதியே
புனல் பந்தல் தந்த துளியே
தண்பாறை தேனே
மாமலை தாவிய மானே -உன்னுள்
நிலவாய் நானும்மாறி இரவில்,
நீரூடல் மெல்ல கொள்ளவா...
மூவின உயிரே
முக்கண்ணன் பாதியே
மனிதனின் ஆதியே
அவ்வின அழகியே
செவ்வின செல்வியே
ஏழை எனை நாடியே
என் வாழ்க்கைத் துணையாய்
நீ வாடியே....