அவளுக்கு ஒரு முத்தம்

காலை கண் விழித்ததும்
உந்தன் காதோரம் ஒரு முத்தம்😘

தேனீர் தரும் போது
உன் இதழோரம் ஒரு முத்தம்👩‍❤‍💋‍👨

குளித்ததும் நீ துண்டு தரும் போது
உந்தன் கை இழுத்து
கழுத்தோரம் ஒரு முத்தம்😚

கை அசைத்து வீடு விட்டு செல்லும்போது
உன் கன்னத்தில் ஒரு முத்தம்👩‍❤‍👨

வேலை இடைவெளியில் வேண்டும்
அளவில்லா அலைபேசி முத்தம்😙

மாலை உன் மடி சாய்ந்து
இடை மீது ஒரு முத்தம்🥰

கட்டில் மேல் காதல் கதை பேசி
உன் கண்கள் மீது ஒரு முத்தம்😍

ஊடல் கொண்டதும்
உந்தன் நெற்றி பற்றி
இதமான ஒரு முத்தம்💞

என் ஒட்டு மொத்த முத்தத்தையும்
அள்ளி கொடுக்க காத்திருப்பவனாக,😜

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (18-Nov-19, 12:28 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : avaluku oru mutham
பார்வை : 1648

மேலே