நெஞ்சை அள்ளி சென்றவள்

பச்சை நிற சேலையில்
பளிச்சென்று இருப்பவளே!

பாரபட்சம் பார்க்காமல்
பார்வையால் மனதை
பட்டென்று பறிப்பவளே!

பெண்ணே!

உன் செவ்விதழில்
வானவில் வந்து வசித்து கொள்ள
நினைக்குதடி!

உன் கருவிழியை
கடத்தி கொண்டு போக
நிலவு திட்டம் தீட்டுதடி!

உன் கண்ணக்குழியில்
பதுங்கி கொள்ள
பிரபஞ்சம் உன் பின்னால் சுத்துதடி!

நீ கடந்து போகும் போது
உன் வாசனையை
சுவாசித்து உயிர் வாழ
காற்று கூட காத்துக் கிடக்குதடி!

உன் உள்ளங்கையில்
கைக்குட்டையாய் மடிந்து கொள்ள
மேகங்கள் எல்லாம் தவிக்குதடி!

கண்னே!

தேன் சிந்தும் உன் புன்னகை!
வான் கொஞ்ச நினைக்கும் காரிகை!

அழகியே!
என்னை மறந்து
எழுதுகோல் இல்லாமல்
எழுதிக் கொண்டு இருக்கிறேன்
உனக்கான கவிதை ஒன்றை
இன்னும் முடிந்தபாடில்லை
உன் அழகிற்கு முடிவு என்பதே இல்லை
இனி எழுதுவதற்கு என்னிடம்
வார்த்தைகள் ஏதும் இல்லை!!!

கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (18-Nov-19, 12:37 pm)
பார்வை : 1494

மேலே