இயற்கை- நிலவு
அகோர இரவின் நிசப்தத்தை
ஓயாது ஒலித்துக்கொண்டிருந்த
சேவித்து கோழிகள் சப்தத்தை
சப்தம் ஏதுமில்லாமல் மௌனமாய்
ஒட்டி , எங்கும் இரவின் இருள் போக்கி
மின்னும் ஆயிரம் ஆயிரம் நட்சத்திரங்கள்
அகல் விளக்கு ஏந்திவர , நீல வானில்
பவனி வந்தாள் பூரண பௌர்ணமி நிலவு
புவனமெல்லாம் வெள்ளி மயமாக்கி
காதலர் உள்ளத்தில் இன்பம் பொங்கும்
வெள்ளிநிலாவாய் , அங்கும் இங்கும்
பரந்த முகத்தில் மாரு இருந்தாலும்
அம்மாசும் அழகிற்கு அழகு சேர்க்க
அழகேதும் குறையாது குளிர் நிலவாய்
குழவி, காதலர், கவிஞர் ஆகியோர் உள்ளத்தில்
பதிந்து ஏதேதோ இன்பம் சேர்த்து