இயற்கை

நம்மைப் படைத்து
நாம் வாழ எல்லாம்
படைத்து நமக்களிக்கும்
இயற்கை நம்மிடம்
கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்
'என்னை அறிந்து
என்னுடன் இயைந்து வாழ்
என்னையே அழிக்க நினைக்காது'
காற்று மண்டலித்தில் மாசு
ஓடும் நதி நீரில் மாசு
கடல் நீரில் கொண்டு சேர்க்கும் மாசு
நிலத்தடி நீரில் மாசு
நேற்றைய கானகம் இன்று
அடியோடு காணாது போகின்றது ......
ஆகிய இவைகள் மனிதன்
இயற்கைக்கு ஆற்றும் பிரதியுபகாரம் !

இப்படியே மனிதன் இயற்கைக்கு
தான் அறிந்தும் அறியாமலும்
அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்காது போயின், கொஞ்சம் கொஞ்சமாய்
முடிவில்லா தலைபோல்
இந்த உலகம் மாறிவிடும்
இயற்கையின் பசுமை இழந்து.....
பாடும் பறவைகள் இழந்து ...
நல்ல நீர் இழந்து...
உயிர் தரும் ' நல்ல காற்றும் இழந்து'
சுற்று சூழல்கள் முற்றும் ஒழிந்து
'ஒரு உயிர் இலா சூனிய கோளாய்'
இதை தடுத்திட விழித்துக்கொள்வோமா
நம் குழந்தைகளுக்கு இயற்கையைப்பற்றி
ஐந்திலேயே போதிப்போம்
இவர்கள் நாளைய 'காவலர்கள்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Nov-19, 4:24 pm)
Tanglish : iyarkai
பார்வை : 610

மேலே