என் கண்ணுக்கு அன்று அழகாய் தெரிந்தவை
என் கண்ணுக்கு அன்று அழகாய் தெரிந்தவை
அம்மாவின் அழகு
அப்பாவின் கம்பீரம்
முதல் வகுப்பு
ஆசிரியர் முக் கண்
கடவுளாய்
பள்ளி மணி அடிக்கும்
அண்ணனெல்லாம்
நாட்டு மன்னனாய்
காக்காய் கடி
கடிப்பவன் உயிர்
நண்பனாய்
இருள்டைந்த
இடங்கள் எல்லாம்
சுற்றி வரும் பேய்களாய்
திரையில் காட்டும்
அழுகை கண்டு
கண்கள் வடித்த கண்ணீர்
வாழ்ந்து வந்த
குடிசை எல்லாம்
அரண்மனையாய்
உயர்வு தாழ்வு
பேதம் இல்லா
கட்டி புரண்டு
போட்ட சண்டை
பசியும் புசியும்
பங்கு போட்ட நட்பு
இனியும் அந்த
பார்வை
என்று கிட்டும் எனக்கு ?