என் உயிர் காதலி♥️♥️
என் உயிர் காதலி ♥️♥️🌹
மானுடத்தின் உரிமை காதல்.
மகத்தான உணர்வு காதல்.
மாலை பொழுதின் மெல்லிய தென்றல் காதல்.
மனதை
லேசாக்கி விடும் காதல்.
மனிதனின் மகோன்னதம் காதல்.
எல்லோரும் கவிஞரே காதல் வந்தால்
அருவியன கொட்டுமே கவிதை காதல் வந்தால்
சாலரத்தின் வழியே தூறல் மழையில் நினையும் பூக்களை ரசிப்போம் காதல் வந்தால்
பட்டாம்பூச்சி வண்ணத்தை பார்த்து ஆச்சிரியபடுவோம் காதல் வந்தால்
உள்ளங்கள் தன் உள்ளத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் காதல் வந்தால்.
இயற்கை அன்னையின் அழகை அனு,அனுவாக ரசிக்கும்
காதல் வந்தால்.
கன்னி அவள், நானும் காலார நடந்தோம். கடற்கரை மணற்பறப்பினிலே.
காதல் மலர் அவளை கண்ணருகில் பார்த்தேன் தேன் சுமந்த ரோஜாவாக.
பிரம்மித்துவிட்டேன்.
பிரம்மன் தான் எவ்வளவு திறமையானவன்.
இப்படி ஒரு சிலையை அழகாக வடித்தானே.
எப்படி அவனுக்கு நன்றி சொல்வது.
காற்றில் பறக்கும் அவள் தலைமுடி
அவள் முகத்தில் அடிக்கடி விழ அதை அவள் சரி செய்யும் அழகு மிகவும் ரசனைக்குரியது.
கண்களால் பேசிய அவள் உரிமையுடன் என் கரம் பிடித்தாள்.
உடல் ஒரு நொடி சிலிர்த்தது.
உள்ளம் பூரித்தது.
உவகை அடைந்த என் உள்ளம் காதல் அங்கீகாரமாக அதை அடையாளபடுத்தியது.
என் உடல் முழுவதும்
புது ரத்தம் ஓடியது.
புது உணர்வு வந்தது.
புதியதாய் பிறந்ததாக உணர்தேன்.
உண்மையில்
இந்த மண்ணில் நான் கண்ட அதிசயம் அவள்.
கண்களால் கவருகிறாள் கன்னியத்துடன்.
பார்வையால் எழுதுகிறாள் பல கவிதை என் இதயத்தில்.
இதழ் திறந்து பேசுகிறாள்.
அது இன்னிசை மழையாய் செவியுடாக நுழைந்து என் ஆன்மா முழுவதுமாக நினைகிறது.
இப்படி ஒரு பேரழகியை நான் பெற்றதற்கு
இந்த ஒரு ஜென்மம் போதாது நன்றி சொல்ல ஆண்டவனுக்கு.
பொதுவாக, ஆண்களுக்கு காதல் பெண்களின் மேல் அவர்களின் ஆழகில் ஈற்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு ஆண்களின் மேல் எப்படி காதல் வரும்.
நான் அவளிடம் கேட்டேன்.
அவள் சொன்னாள்.
'ஆண்' என்ற அடையாளம் மட்டும் போதுமே.
பெண் முடிவு எடுக்க மாட்டாள் , முடிவு எடுத்துவிட்டால் பின்வாங்கமாட்டாள்.
பெண் தன்னை காதலிக்கும் ஆணிடம் தன்னை முழுவதுமாக அற்பணிக்கிறாள்.
ஆணின் தரத்தை உயர்த்துகிறாள்.
ஆணின் நேர் கோடு
வாழ்க்கை பயணம் அங்கே ஆரம்பம் ஆகிறது.
சுகமும், சுமையும் நிறைந்தது தான் வாழ்க்கை.
தேக சுகம், இருபாலருக்கும் இன்பம் தான்
இல்லை என்று மறுபதற்கு இல்லை,
ஆனால் அதன் நோக்கம் சந்ததியின் தேடல் அல்ல
மானுட சங்கிலி தொடரை வலபடுத்த.
வாழ்க்கையின் தாத்பரியம் இது தானே.
ஆணையும், பெண்ணையும் ஆண்டவன் படைத்தான் என்றால் அது அவர்கள் இன்பமாக இருக்க மட்டும் அல்ல,
அன்பை நாளும் இந்த உலகில் வளர்க்கவே.
அறத்தை போற்றவே.
மகிழ்ச்சியை கொண்டாடவே.
ஆடிவிட்டேன் அவள் பதிலை கேட்டு.
--பாலு.