மெய்ஞ்ஞானி நின்றநிலை வேறுபடி னும்சிறப்பாமே - நீதி வெண்பா 29

நேரிசை வெண்பா

வென்றி வரியுகிரும் வெண்கவரி மான்மயிரும்
துன்றுமத யானைச் சுடர்மருப்பும் - நின்றநிலை
வேறுபடி னும்சிறப்பாம் மெய்ஞ்ஞானி நின்றநிலை
வேறுபடி னும்சிறப்பா மே. 29

- நீதி வெண்பா

பொருளுரை:

வெற்றியையுடைய புலி நகமும், வெண்மையாகிய கவரிமானின் மயிரும், மிகுந்த மதத்தையுடைய யானையின் ஒளி பொருந்திய கொம்பும் தாம் முன்பிருந்த இடத்தினின்று வேறு பட்டாலும் சிறப்பை அடையும்,

அவை போல, மெய்ஞ்ஞானியானவன் தான் நின்ற நிலையினின்றும் வேறுபட்டு எத்தொழிலைச் செய்தாலுஞ் சிறப்பை அடைவான்..

கருத்துரை:

மெய்ஞ்ஞானிகள் எந்த நிலையில் நின்றாலும் மேன்மையடைவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-19, 11:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

மேலே