வீரம்

ஊசிக்கு பயந்து அலறும் வீரன்
இங்கு உண்டு

உயிர்வலி உணர்ந்தும் ஊதாசீனப்படுத்தாது

மீண்டும் முக்கலில் கிழிபட்டு
வலி தாங்கும் வீரம்

எவனுக்கு இங்கு உண்டு

எப்பொழுதும் கீழிருத்திக்கொள்வதால்

கீழானவள் என்ற எண்ணம் பலருக்கு
இங்கு உண்டு

எழுதியவர் : நா.சேகர் (23-Nov-19, 9:56 am)
Tanglish : veeram
பார்வை : 514

மேலே