வரம் தருவாய்
இறைவா எனக்கொரு வரம்தருவாய் !- நான்
இன்னொரு பிறவி எடுப்பதற்கே!
இறைவா எனக்கருள் புரிந்திடுவாய் !- நான்
இத்தமிழ் மண்ணில் பிறப்பதற்கே!
நிறைவாய் செந்தமிழ் படித்திடுவேன் !-என்
நினைவில் என்றும் நிறைத்திடுவேன் !
குறையேது மிருந்தால் எனைபொறுப்பாய் !
கொடுப்பாய் பிறவியில் தமிழ்ப்பிறவி !