மறந்துப்போகும் எல்லாம்
கண்ணீரும் தண்ணீரும் கழுவ முடியாதுதான்
உன் உள்ளத்தில் கொட்டிய
சேற்றை
அழுவதால் ஆகப்போவது
ஏதுமில்லை
வழிபயணத்தில் உள்ளங்காலில்
குத்தியமுல்லை
நினைத்து உட்கார்ந்துவிட்டால்
பயணம் தடைபடும்
பிடுங்கி எறிந்துவிடு தொடர்ந்து
நட சிறிதுவலியோடு
மறந்துபோகும் எல்லாம்