இயற்கை
பஞ்சவர்ண கிளியே
யார் உன் அலகுக்கு நிறம் தீட்டியது
யார் உன் சிறகுகளுக்கு
கொஞ்சும் அழகு தந்தார்
இப்படி வித விதமாய் வண்ணங்கள் பூசி
நீ அறிவாயோ எத்தனை அழகு நீயென்று
உன்னழகில், உன் கிள்ளை மொழிக்கு
மயங்காத பிள்ளைகள் மண்ணிலும் உண்டோ ?
தோகை மயிலே , யார் உனக்கு
இந்த நீண்ட தொகை தந்தது
தந்து அது வெறும் தோகை என்றில்லாது
அதில் 'மயில் கண்டு' என்றே பேசப்படும்
அழகு நீல வண்ணம் பூச அதைக்கண்டு
குமரனும் மயங்கி வாகமாய் ஏற்றானோ
கோல மயிலே யாரிடம் நீ
நடனம் பயின்றாய் ..... உன் நடனம் கண்டு
மயங்கா மாந்தரும் உண்டோ புவியில்
உன்னைப்போல் நடனம் ஆட
பரதம் பயிலும் சில மாதரும் இங்கு
முயல்கின்றார்... நீ அறிவாயோ
அன்னமே உன் நடையை கண்டுதான்
மண்ணில் மாதரும் நடைபயில்கின்றாரோ
தெரியவில்லை .....
யார் உனக்கு இந்த அழகு நடை தந்தது
நீல வானமே ..... தொட முடியா உச்சியில்
நீ இருக்கின்றாய்... நீ நிஜம்தானா
இல்லை வெறும் வெற்றிடமா ....
அப்படியென்றால் அந்த வானவில்....அதை
யார் எங்கு வரைந்தாரோ....
விண்ணில் நான் காணும் அந்த
சந்திரன், சூரியன், இன்னும் ஆயிரம் ஆயிரம்
விண்மீன்கள் ...... இவை நீல வானே
உன்னுள்தான் நான் காண்கின்றேன்
யாதான் இவற்றைப் படைத்தது
அந்த கதையை கொஞ்சம் சொல்வாயோ நீ
எனக்கு, என் பேரனுக்கு நான் அதை சொல்ல
ஓயாது அலை ஓசை கேட்கும் சமுத்திரமே
யார் உன்னை படைத்தாரோ
உனக்கேன் அந்த சந்திரன்மேல்
ஓயாத காதலோ .....
இப்படி உனக்கு சந்திரன்மேல் காதல்
இதை அறியாது நதியோ உனைத்தழுவிட
ஓடி வருவதேனோ.... தெரியலையே
மரகத கற்கள் பதித்ததுபோல் ...
காணும் பசுமைக் கானகங்கள் ....
உங்களை படைத்தது யாரோ....
இயற்கையே .... நீ தானோ இவையெல்லாம்
அப்படித்தான் நான் நினைக்கிறன்