தென்றல்

தென்றல்

மேகங்களின் வெள்ளிக் கொலுசு மணிகளை
அவிழ்த்து விட்டுச் செல்வது யாரோ?

சிரிக்கும் பூக்களின்
நறுமணத்திற்கு சிறகுகள் பூட்டியது யாரோ?

உதிரும் சிறகுகளை சுமந்து சென்று
பத்திரமாக தரையிறக்குவது யாரோ?

பல்வண்ண பூக்களை அனிமோபீலியாக - பூமகளின்
கூந்தலில் சூடிச் செல்வது யாரோ?

கனல் விரியும் சூரியக் கதிர்களுக்கு
இதமாக முத்தமிட்டுச் செல்வது யாரோ?

தொட்டிலிலாடும் கனிகளுக்கு இனிய
கற்பனை கதைகள் கூறுவது யாரோ?

எழுதியவர் : ச. செந்தில் குமார் (25-Nov-19, 9:41 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
Tanglish : thendral
பார்வை : 380

மேலே