தலைமுறை வாழ வேண்டும்
தலைமுறை வாழ வேண்டும்!
இருப்பதை அழித்தார் !
இன்னலும் கொடுத்தார் !
வருத்தமும் கொள்ளார் ! – புவி
வளங்களைக் கெடுத்தார் ! – பிறர்
வாழ்வினை அழித்து, தானே
வாழ்ந்திட நினைத்தார் ! – அவரும்
வாழ்வது சில நாள் என்ற
வாய்மையும் மறந்தார் ! - உலகம்
கொடுத்ததை எல்லாம் தாமே
எடுத்திட நினைத்தார் !
கெடுத்திடத் துணிந்தார்! – யாரும்
கேட்பவர் இல்லை யென்றே !
அடுக்குமோ ? உலகம் மேலும்
அழிவதைக் கண்டு நாமும்
தடுத்திட வேண்டும் ! – இன்னும்
தலைமுறை வாழ வேண்டும் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
