அவள் பார்வை
தலைகுனியாத காளை
என்று இந்நாள் வரை
என்னை நான் நினைத்திருந்தேன்
இன்று உன் பார்வை .....
என் மீது பட்டது .....
பட்டதும் என் விழிகள்
உன் விழிகளோடு சேராது
மண்ணை நோக்கி .....
ஆம் என் விழிக்கு
உன் பாதங்கள் பார்த்திட
பேராவல்.... அந்த
அழகிய தாமரைப் பாதங்களை
காளையின் தலையை
குனிய வைத்த அவள் பார்வை