காதல் காகிதம்

நீ பரிசளித்துபோன
புன்னகை காகிதத்தில்
என் கண்ணீரை
பொதி செய்துவைத்தேன்,
*
கண்ணீரை உறிஞ்சிக்கொண்ட
உன் காகிதம்
அச்சடித்துக் கொண்டது
ஒரு கல்யாண அழைப்பிதழ்.
*
மணமகளாய் நீயும்
மணமகளாய் நானன்றியும்
மெய்சிலிர்க்கச் செய்த அக்காகிதம்
இப்போதோ மக்கிப்போனது
என் காதலைப் போல ..

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Dec-19, 2:47 am)
Tanglish : kaadhal kaakitham
பார்வை : 219

மேலே