இனியும் வேண்டாம் பெண்ணே

ஆளமான வெட்டு
கையில் காயம்
அறியாமல் வந்தது
எத்தனை வேதனை
சகித்தாள் அவள்
ஆறி விட்டது
வாடிய உடல்
இப்போது
தேறி விட்டது

வாக்களித்து அவன்
மாறுதல் செய்தானா?
ஏமாற்றம் உனது
நெஞ்சில் தந்தானா?
வேதனை தான்
விட்டுத் தள்ளு
நிச்சயம் ஒரு நாள்
தண்டனை பெறுவான்

தடமின்றி ஆறட்டும் இக்காயம்
இனியும் ஒரு மனவேதனை
வேண்டாம் பெண்னே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (8-Dec-19, 12:34 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 208

மேலே