இன்னொரு பிறவி
இன்னொரு பிறவி எனக்கு உண்டா
என்கிற கேள்வி எழுகிறது
இந்தப் பிறவியை மையமாக வைத்து
இந்த கேள்வி எழவில்லை
இந்தப் பிறவியில் எனது கடமையை
நானும் ஒழுங்காய் செய்துவிட்டேன்
என்னைப் படைத்த ஆண்டவனிடத்தில்
அந்த முடிவை நான் விட்டு விட்டேன்
இன்னும் எத்தனை பிறவி எனக்கு உண்டு
என்று அறிய ஆசைதான்
மற்றவரிடம் அதை பகிரவேண்டாம்
என்னிடம் மற்றும் அவன் அதை பகிரட்டுமே
அடுத்த பிறவியின் எதிர்பார்ப்பு
என்னுள் வேகமாய் வளர்கிறது
அந்தப் பிறவியையும் வாழ்ந்து பார்க்க
எனது மனமும் தயாராகிறது
எப்படி வேண்டுமானாலும் அது இருக்கட்டும்
அதையும் வாழ்ந்துதான் பார்த்திடுவேன்
வாழ்வின் மீது பற்று இருப்பதால்
இந்த எண்ணம் என்னுள் எழவில்லை
இப்பொழுதைய வாழ்வையும்
அடுத்த பிறவியையும் நான்
கோடு போட்டு இணைக்கவில்லை
அடுத்த பிறவியில் இந்த தருணம்
நான் வாழ்ந்த நினைவு இருக்குமா தெரியவில்லை
இதைப் படித்து விட்டு என்னிடம் பேசுவோர்
தத்துவ விளக்கம் தரத்தேவையில்லை
எல்லாம் அறிந்து அனைத்தையும் உணர்ந்த
என் அறிவும் மனமும் கேட்டதைத் தான்
பகிங்கரமாக நான் வைக்கின்றேன்
பரம்பொருளிடம் நான் கேட்கின்றேன்
அவனும் சற்றே யோசித்து
என்னிடம் பேச வந்திடுவான்
அதுவரை பொறுமையாய் காத்திருப்பேன்
அட்டகாசமாக இந்த வாழ்வை வாழ்ந்திடுவேன்