காலநேரம்

காலத்தை சரியாய் கணிக்கவே
நேரத்தை கண்டு பிடித்தனரா

நேரத்தை நாமும் அறிந்து கொள்ள
காலத்தை பயன் படுத்தினரா

காலமும் நேரமும் ஒன்றாய் சேர்ந்து
நமது வாழ்வை சீராய் ஆக்கியதா

நேரம் பார்த்து,காலம் பார்த்து
நம் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறதா

நேரமும் காலமும் நகரும் திசையால்
நமது வாழ்வும் பலன் அடைகிறதா

நேரம் / காலம் என்ற ஒற்றை சொல்லே
நமக்கு போதும் என்பேன் நான்

இதில் நல்லது, கெட்டது என்பதையெல்லாம்
நாமும் சற்று புறக்கணிப்போமே

பின், பஞ்சாங்கம் கணித்து துல்லியமாய்
சொன்ன நம் முன்னோர்கள் என்ன மூடர்களா
என கேட்கத் துடிக்கும் நல்லோரே

அவர்கள் கணிப்பை குறைத்துக் கூற
எனக்கு தகுதி துளியுமில்லை

இருந்தும் நல்லதை கெட்டதை நேரத்துடனே
நாமும் பொருத்தி பார்த்து விட்டால்

நம் மனதின் நிலையும் சீர்குலையும்
என்பதை நீங்களும் அறியீரோ

காலம் நேரம் பார்த்தா நம்
பிறப்பும் இறப்பும் நடக்கிறது

பின் இடைப்பட்ட நாட்களில்
கால நேரத்தை சற்றே நாமும்
மறந்து விட்டு

இருக்கும் காலம் எதுவரையோ
அதுவரை மகிழ்ச்சியாய் இருப்போமே

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (12-Dec-19, 4:54 pm)
பார்வை : 58

மேலே