சாயர்புரத்தான்
சாயர்புரம்... அது
காலத்தால் சாயாதபுரம்...
அங்கு அறுபத்தைந்தில்
பிறந்த பிரிய நண்பன்
பிரேம் ஆனந்த் சுரேந்திரன்...
கள்ளமில்லா உள்ளத்திற்குச்
சொந்தக்காரன்...
ஆறடி ஒரு அங்குலம்
இவன் உயரம்... அதனால்
யாரடி இவர் எனக் கேட்பர்
மூக்கின்மேல் விரல் வைத்து
மாற்றுப் பாலினத்தவர்...
படித்தது கிராமத்துப் பள்ளி..
படிப்பில் கில்லி... அருமையாய்
விளையாடவும் செய்வார்
உற்சாகமாய் துள்ளி...
படித்துப் பெற்றார் பொறியியலில்
முதுநிலைப் பட்டம்...
அதன் பின்னரும்
படித்தார் சட்டம்...
பொறியியல் பாதி
சட்டம் பாதி கலந்து
இவருக்கென உருவானது
அரசாங்க பதவி...
கிராமத்துப் பள்ளி... அரசு
பொறியியற் கல்லூரி...
புத்தகமும் கையுமாய்
இருந்தார்... அதனால்
வேலையும் கையுமாய்
இருக்கிறார் சென்னை
பெருநகர வளர்ச்சிக்
குழுமத்தில்.. உயர் பதவியில்..
வாழ்வேன் என்றும் நிரந்தரமாய்
என எண்ணி எப்போதும்
படிக்கச் சொல்கிறார்
மகாத்மா காந்தியடிகள்...
கேடில் விழுச்செல்வம் கல்வி
என்கிறார் திருவள்ளுவர்...
முனைந்து இன்னும் படிக்கிறான்
பிரேம் ஆனந்த்... அதனால்
முனைவர் பட்டம் விரைவில்
வாங்கப் போகிறான்...
அண்ணா பல்கலையில்...
மாறும் உலகில் மாறாத
குணங்கள் நிறைய இவனிடம்...
அதிலொன்று... உலக நாயகன்..
பாரத் கமலஹாசன்.. அவரின்
என்றும் மாறாத ரசிகன்...
பிரிய நண்பன் பிரேம் ஆனந்த்... பேரானந்தமாய் வாழ்வாய்
பெருமிதத்தோடு வாழ்வாய்..
நல்லதொரு குடும்பம்
பல்கலைக்கழகமாய் வாழ்வாய்...
வானும் வசந்தமும்
வசப்பட வாழ்வாய்...
வளங்கள் எல்லாம் பெற்று
நீடூழி வாழ்வாய்... நிலைத்த
புகழோடு வாழ்வாய்...
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...
👍🙏💐😀👏🌹🧁🎂