வீச மறந்த தென்றல்

கருத்துக்களை
எதாத்தமாய்ப் பரிமாறி/
கவிதைகளின்
கருப்பொருளை ஆராய்ந்து/

நன்மை தீமை
பிரித்துக் காட்டி/
அறிவுரைகளை
அதிகமாகவே புகட்டி/

அன்பைக் கொடுத்து
நட்பை வளர்த்து/
நாட்டு நடப்பை
இணைந்தே பேசி/

புன்னகைப் பூக்களை தூவி /
துன்பக் கிளையை அறுத்து/
துயரத்தின் போது ஆறுதல்க் கூறி/

சோகத்தை செவி சாய்த்துக் கேட்டு/
இதமாய் உள்ளம் தொட்டு/
பதமாய் ஒத்தனம் போட்டு/

நித்தமும் என் திசை நோக்கிய தென்றல்/
கார்கால மேகமாய்க் கலங்க விட்டு/
ஓடை நீரை கண்ணுக்குள் ஓட விட்டு/
வீச மறந்ததே ஏனோ ?
தென்றலே நீயும் திசை மாறினாயோ?

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:14 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 336

மேலே