சிவனே தெய்வம்

சிவனே தெய்வம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

இதைச் சொன்னவர் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னமேத் தெரிந்த திருமூல நாயனார் ஆவார்.

சிவனொடுக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பாரிங் குயாரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடி தலைத்தாம ரையானே......திருமூலர்

அண்டவெளியிலே கோடிக் கணக்கான அண்டங்கள் இருக்கின்றன. இதை நம்முடைய ரிஷிகளும் ,முனிவர்களும்,
சித்தர்களும் கணக்கெடுத்து வைத்துள்ளார்கள் .அவர்களின் கணக்குப் படி ஒரு பிரபஞ் சத்திற்கு மொத்த அண்ட ங் கள் 132765696000
பூமியைப்போல 1000 கிரக ங் கள் (அண்ட ங் கள்) சேர் ந்தது 1 பேரண்டம்
1008 பேரண்டங்கள் சேர்ந்தது 1 புவனம் (1008000 அண்ட ங் கள் )
224 புவனங்கள் சேர்ந்தது 1 சாகரம் ( 225 792 000 அண்டங்கள் சேந்தது.)
7 சாகரங்கள் சேர்ந்தது 1 பதம் (1580544000 அண்ட ங் கள் )
84 பதங்கள் சேர் ந்தது 1 பிரபஞ்சம்( 132765696000 அண்ட ங் கள் )
அனைத்துப் பத, சாகர, புவன , பேரண்டங்கள் யார் படைத்தார்.

இத்தனை அண்டங்களில் ஒரு அண்டம்தான் நமது பூமி என்றால் எவ்வளவு சிறியது நமது பூமி உருண்டை. இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கன அண்ட ங் களையெல்லாம் பராபரைத்தாய்
ஒரு நொடிக்குள் படைத்தளித்தாள் என்றால் அவள் எவ்வள்வு சக்திவாய்ந்தவள் என்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (17-Dec-19, 8:47 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 359

மேலே