திகைப்பில் மூழ்கி

போதைப் பொருளொன்று உடலினுள் சென்றால்
மனம் புதுஉலகைக் கண்டு குதுகலமாகி
மகிழ்ச்சியில் துள்ளி எழுச்சியாவதைப்போல்
அழகியே உன்னை திடுமெனப் பார்த்த போது
திரவங்கள் நெஞ்சில் சுருக்கென்று சுரக்க
திகைப்பில் மூழ்கி திக்குமுக்காகிப் போனேன்
பல நூறு யானை பலம் என்னுள் புகுந்ததாய்
பன்மடங்கு பிரமிப்பில் பரவசமானேன்
பரிதியின் ஒளியைவிட பிரகாசமான
அழகிய நிலவாய் உன்னை நான் கண்டேன்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Dec-19, 8:28 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : thigappil moozki
பார்வை : 159

மேலே