பூ ஆனது
பூ ஆனது
=====================================ருத்ரா
சொல் உதிர்த்தாய்
பூ ஆனது.
விழி உயர்த்தினாய்
வானம் முட்டியது.
உன் நெஞ்சில்
என்னை நினைத்தாய்
அது மட்டும் ஏன்
பூகம்பம் ஆனது.
நான்
நொறுங்கிக்கிடக்கிறேன்
நம் இதயத்துடிப்புகளுக்குள்.
=================================================