அவள் பேரழகி

சந்தோசஷத்தில் துள்ளிக் குதிக்கிறாய்
முகத்தைக் கிள்ளிப் பார்க்கிறாய்
உச்சி முதல் பாதம் வரை ஊர்ந்து ஊர்ந்து ரசிக்கிறாய்
மொத்தமாய் அள்ளி அள்ளி அணைக்கிறாய்
துரோகம் செய்து விட்டாயே மோசக் காற்றே
காதல் தூது மாத்திரம் தானே
போகச் சொன்னேன் என்றேன்
நெருங்கி வந்து காதில் சொன்னது
.உன் சேதி சொல்லத் தான் சென்றேன்
அவள் உருவம் கண்டதும் பாதி மயக்கம் கொண்டேன்
ஏதோ ஒன்று என் கண்ணை மறைத்தது
பீதி தான் நலம் விசாரிக்கும் தோரணையில்
அத்தனையும் செய்து விட்டேன்
அவள் பேரழகி நீ கொடுத்து வைத்தவன்
கலக்கத்தில் கூற மறந்து விட்டேன்
மீண்டும் ஒரு முறை போய் வரவா என்றது
கொன்று விடுவேன் என்றேன் நான்
அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (19-Dec-19, 11:25 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : aval peralagi
பார்வை : 255

மேலே