சொல்வதைக் கேள் நண்பா...! cell உனக்கு பொல்லாதடா..!

கண் விழித்தவுடன் கைப்பிடித்த நீ-இனி
உறங்கும் வரை உறவாடிடுவாய்..
ஒருவருடன் ஒருமணிநேரம்
double sim- சொல்லவும் வேணுமோ!

இயற்கையின் எழிலோசை ஒரு புறம்,
மற்றவன் பாடுபற்றி சிந்தனையே இல்லாமல்
உன் china phoneஐ கையில் வைத்து,
ஒலிபெருக்கி அலறும் பாட்டு..

ஒழுங்கான வேலை இல்ல- costlyயா
i-phone , N-series
touch model என்று சொல்லி
சும்மா சும்மா தட்டிக்கொன்டு
தெருத்தெருவா சங்கம் கூட்டி-
வெட்டிப்பேச்சு, விடிஞ்சாப்போச்சு,

உன் toothஐப் பற்றி அக்கறை இல்ல-
blue toothஇல இலவச சேவைகள் வேறு,
உன்னை விட்டா உலகத்தில
photographer இல்ல எண்டு
ஊர் முழுக்க சுத்திச்சுத்தி
படமெடுத்துப் பரிகசிப்பாய்....

அவளுக்கு அப்பிடிப்போடு- இவளுக்கு நாக்கமூக்க
ஆளுக்கொரு ring toneவச்சு அரட்டை அடித்திடுவாய்.
1000 minutes outgoing free எண்டு sim வாங்கி
60 பேருக்கு conference call பண்ணி
அர்த்தமற்ற விடய‌த்தைப் பற்றி
அறிக்கை விட்டே அறுத்திடுவாய்..

internet , e-mail எண்டு சொல்லி கண்டதையும் browse பண்ணி
காசை கரியாக்கி கண்ட மிச்சம் ஒண்டுமில்லை...
சொல்வதைக் கேள் நண்பா...!
cell உனக்கு பொல்லாதடா - இது
கவனக் கலைப்பான் மட்டுமில்லை- உன்
எதிர்கால கனவை கலைக்கவந்த காலனடா...

எழுதியவர் : சுஜன் (13-Sep-11, 1:46 am)
சேர்த்தது : சுஜன்
பார்வை : 794

மேலே