இறையின் இரைகள்

மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானாம் ! - பழமொழியும் கொஞ்சம் உண்மை பேசட்டும் ...
கருகும் மரங்களையும் காயும் மக்களையும் கண்டபின்னே...

உயிர்வரம் வழங்கி உலகிற்கு வரவேற்றாய் - இறைவா !
பசி கொடுத்து பழிவாங்கிவிட்டாயே!!!

பூப்பெய்துதலுக்கு வயதுள்ளது போலே பசித்தலுக்கும் வந்தாலென்ன ... சில பிஞ்சுகளுக்குப் பரிசாய் வறுமையும் படைத்ததேனோ ?

ஆகப்பெரும் இறைவள்ளல் வெட்கித்தலைகுனியத்தான் வேண்டும்-பசியோடு
எளியவன் படையல் படைத்தான் படைத்தோனுக்கு !

பசி இரக்கமற்றது, சுயநலத்தின் பேராட்சியது
உணர்வுகளின் சமாதியது !

தாயாவது தாரமாவது ... நீத்தது எவராயினும் மனவலிகள் ஆறுவதுமுன்னே ...
ஆகாரம் தேடுமாம் பாழும்வயிறு !
இவ்வீனப்பிறவிகள் வாழ்ந்தொழியட்டும் ...
எல்லாம் உனக்கே சமர்ப்பணம் இறைவா !

எழுதியவர் : சௌந்தர்யா (23-Dec-19, 10:39 pm)
பார்வை : 113

மேலே