ரோஜா வீதி
ஆங்காங்கே குப்பைகள் குவியலாய்க்
குவிந்து நிறைந்து கிடக்கும் ஒரு வீதி !
ஓர் ஓரத்தில் ஒரு ரோஜாச் செடியை
நட்டு வைத்தேன் !
ஓர் இனிய காலையில்
ரோஜா பூத்துச் சிரித்தது !
பார்த்த வீதியில் வசிப்பவர்கள்
அதிசயித்து தன்னார்வலர்களாகி
குப்பைகளை துப்புரவு செய்து
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரோஜாவை நட்டனர்
ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கின !
தெரு
ஊராட்ச்சிக்காரன் பேர் வைக்காமலே
ரோஜா வீதி என்று பேர் பெற்றது !