வான தேவதையின் பாடல் - மழை

கவிதை - இயற்கை - மழை!

வான தேவதையின் பாடல் - மழை !

வானுலகத் தேவதையின் கவிதை வரிகள்;
வரைகோலே அவள்கையில் மின்னல் சக்தி!!
வண்திரையே கருக்கொண்ட கார்மே கங்கள்;
வரிகளென அவள்தீட்டும் மின்னல் கீற்று!!
வாய்விட்டுப் படிக்கின்றாள் வெடிக்கும் இடிகள் - மேகம்;
வார்க்கின்றாள் இசையின்பத் தாலே மழையை!!

-- செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் மகி.
26 டிசம்பர் 2019 - வியாழக் கிழமை.

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (26-Dec-19, 6:01 am)
பார்வை : 88

மேலே