பொங்கல்

விளைந்துவந்த நெல்லறுத்து
அரிசியாக்கி அளந்தெடுத்து
இனிப்பான கரும்பெடுத்து
வெள்ளம் கொஞ்சம் சேர்த்தெடுத்து
மண்பானை பார்த்தெடுத்து
அடுப்புகூட்டி விறகெரித்து
ஊர்கூடி ஓரிடத்தில்
ஒன்றாக மையமிட்டு
தீங்கேதும் இல்லாது மகிழ்ந்திருக்கும் அந்நாளில்
தமிழினமும் பெருந்திரளாய்
சாதிமதம்தான் கடந்து
பொங்கிவரும் சோறுதனைக்
கண்டவுடன் கூட்டமெல்லாம்
ஆர்ப்பரித்துப் பாடினரே
பொங்கலென்று ..
பொங்கலோ பொங்கலென்று..

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (26-Dec-19, 2:49 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 6268

மேலே