தோழிக்காக ஒரு கவிதை பகுதி சில

நான் தோழியும் பேச துவங்கினோம்
சாலையோரம் நடந்து கொண்டே
மௌனமாய் நடந்துகொண்டே செல்ல
பேச துவங்கினாள்...

ஏன் மௌனமாய் இருக்கிறாய் என
கேக்க நான் சொன்னேன்
வரும் வாரம் ஒரு கவிதை போட்டி
அதில் என்ன கவிதை சொல்ல
என்று சொல்லி முடிக்க

உனக்கா பஞ்சம் கவிதைக்கு
எதையும் கவிதை செய்வாய்
எல்லாம் கவிதை செய்வாய்
எதிலும் கவிதை செய்வாய்
பிறகேன் தயக்கம் கொண்டாய்
என கேட்டு முடிக்க

கவிதை ஆயிரம் சொல்லலாம்
அது சிலரது மனதை வெல்லலாம்
இன்னும் சிலரை கொள்ளை கொள்ளலாம்
கேக்கும் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம்
எப்படி கவிதை சொல்ல என்றே தயக்கம் என்றேன்

அவள் முதலில் பயிற்சி செய்
அதன் பின் முயற்சி செய்
முயல்வதே முதல் வெற்றி
எந்த முயற்சியும் ஒரு பாடம்
என்று என்னை ஊக்குவித்தாள்

நாளை உன்னிடம் முதலில்
அந்த கவிதை சொல்கிறேன்
நீ சொல் உன் கருத்தை என்றேன்
சரி என்று தலையாட்டி விடைபெற்றாள்
நானும் அன்று பிரிந்தேன் புன்னகையுடன் ...




தொடரும் தோழிக்கான கவிதை ...

எழுதியவர் : ருத்ரன் (27-Dec-19, 5:48 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 167

மேலே