இயல்பாய் வாழ்ந்துவிடு =================

இயல்பாய் வாழ்ந்துவிடு
=================
கடுமையான பனி
__ கரைக்கிறதே மனங்களை
காயமான கவலைகளையும்
__கரைத்து உண்ணவும்
கலங்கிய கண்களால்
__கரைந்தனவே பாடுகள்
கற்று தெளியவே
__காலம் சொல்கிறது
காற்றின் மாசுக்களால்
__கலங்கிறதே மேகம்
காதலால் வாழும்
__கனிவான உலகம்
இனியமொழியை பகிரவே
__இன்பம் தொடருதே
இல்லறம் செழிக்கவே
---இன்ப அன்பால்
இனிமை கொடுப்பாள்
--இல்லறத்தின் அரசி
இல்லறமின்றி இல்லமால்
___இயல்பின் அழகும்
இருளாகி போகவே
__இடமறியாமலே வாழ்வும்
கரைந்து போகிறதே
___ இயல்பாய் தேடி
இயற்கையாய் வாழ்ந்து
__இன்னிசை கொள்ளவே
இறைவன் வண்ணம்
__இதயம் அன்புகொண்டு
இயலாத சொர்க்கத்தையும்
அனுபவித்தே மகிழும்

எழுதியவர் : அகிலன் ராஜா (28-Dec-19, 12:50 am)
பார்வை : 283

மேலே